நான் உன்னை சுற்றி வருகிறேன்
நீயோ அவனை சுற்றி வருகிறாய்
அவன் பின்னால் சுற்றுவது பல பேர்
உன் பின்னால் சுற்றுவது நான் ஒருவன் தான்
அவனை நெருங்கமுடியவில்லை என்று நீ வருந்துகிறாய்
நானோ உன்னை நெருங்கமுடியவில்லை என்று வருந்துகிறேன்
இது தான் இயற்கையோ?
.
.
.
.
.
- இப்படிக்கு
- சூரியனை சுற்றும் பூமியை பார்த்து நிலா